ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையை சிறுத்தை ஒன்று கடந்து சென்றதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். பண்ணாரி அம்மன் கோவில் அருகிலுள்ள சோதனை சாவடி பகுதியில், வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை சாவகாசமாக நெடுஞ்சாலையை கடந்து சென்றது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.