பழைய ஓய்வூதிய திட்டம் - கருத்து கேட்பு
ஓய்வூதிய திட்டங்கள் தொடர்பாக ஆய்வு செய்ய மூத்த ஐஏஎஸ் அதிகாரி ககன்தீப்சிங் பேடி தலைமையில் அமைக்கப்பட்ட குழு செப்டம்பர் மாதத்தில் நான்கு கட்டங்களாக கருத்துக்களை கேட்கவுள்ளது. 2003-ம் ஆண்டு ஏப்.1-ம் தேதிக்கு முன்பிருந்த பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டி அரசுப் பணியாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும் நிலையில், ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்து செப்டம்பர் இறுதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தி, தமிழக அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது. ஏற்கனவே மூன்று கட்டங்களாக கருத்துக்கள் கேட்கப்பட்ட நிலையில், விடுபட்ட சங்கங்களின் கோரிக்கையை ஏற்று, செப்டம்பர் மாதத்தில் மூன்றாம் தேதி, நான்காம் தேதி, பதினோராம் தேதி மற்றும் 12ஆம் தேதி ஆகிய நாட்களில் பல்வேறு சங்கங்களிடம் கருத்துக்களைக் கேட்கப்பட்டு, அதன் அடிப்படையில் அறிக்கையை தமிழக அரசுக்கு சமர்ப்பிக்க உள்ளது.