"இனி ஆட்டோவில் Ola, Uber சேவை இல்லை?" ஓட்டுநர் சங்க நிர்வாகிகள் அதிரடி

Update: 2025-01-29 13:49 GMT

ஆட்டோவுக்கான புதிய மீட்டர் கட்டணத்தை அறிவித்துள்ள ஓட்டுநர் சங்கங்களின் கூட்டமைப்பினர், இனி OLA, UBER உள்ளிட்ட செயலிகளுடன் இணைந்து வாகனங்களை இயக்கப் போவதில்லை என அறிவித்துள்ளனர். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஓட்டுநர் சங்க நிர்வாகிகள், ஆட்டோவுக்கான மீட்டர் கட்டணத்தை உயர்த்தாத அரசுக்கு கண்டனம் தெரிவித்ததுடன், தாங்களே கட்டணத்தை நிர்ணயித்துள்ளதாக அறிவித்தனர். இதேபோல், OLA, UBER உள்ளிட்ட செயலிகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகவும், அதனால் நம்ம யாத்ரி நிறுவனத்துடன் இனி இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளதாகவும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்