திமுக மீது நா.த.க. வேட்பாளர் சீதாலட்சுமி குற்றச்சாட்டு | DMK | NTK | Seethalakshmi | Erode Election
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், நாம் தமிழர் கட்சி வாக்குச்சாவடி முகவர்களை வரவிடாமல் திமுகவினர் விரட்டி விட்டதாக, அக்கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக அராஜக அரசியலில் ஈடுபடுவதாகவும், மக்களை ஏமாற்றி ஓட்டுக்களை வாங்குவதாகவும் சீதாலட்சுமி விமர்சனம் தெரிவித்துள்ளார்.