`Police’ என கூறி வடக்கு இளைஞரிடம் வழிப்பறி.. மெட்ரோவில் கட்டிப்போட்டு தப்பியோட்டம்

Update: 2025-06-12 06:09 GMT

சென்னை ஏழுகிணறு காவல் நிலையத்திற்கு அருகில் உள்ள வைத்தியநாதன் தெருவில் போலீஸ் எனக்கூறி, வட மாநில இளைஞரிடம் 15 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் செல்போனை மர்மநபர்கள் பறித்து சென்றுள்ளனர்.

ராஜஸ்தானை சேர்ந்த நிர்மல், இருசக்கர வாகனத்தில் சென்ற போது, அவரை போலீஸ் என கூறி மடக்கி பிடித்த இருவர், அவரை தங்களது இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளனர். சிறிது தூரத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு , நிர்மல் இடம் இருந்து பணம் மற்றும் செல்போனை பறித்த அவர்கள், அவரை வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் மொட்டை மாடியில் கட்டிப்போட்டு விட்டு தப்பி சென்றுள்ளனர். இது குறித்து நிர்மல் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்