மயிலாடுதுறையில் நடந்த திருமண வரவேற்பு விழாவில், வடமாநில சமையல் கலைஞர் ஒருவரின் பாதாம் பால் தயாரிக்கும் வித்தியாசமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஒலிபரப்பான பின்னணி இசைக்கு ஏற்ப வடமாநில சமையல் கலைஞர் அவரது இருக்கையில் சுழன்று சுழன்று பாதாம் பாலை தயாரித்து வழங்கிய விதம் பார்வையாளர்களை மெய்மறக்க செய்தது. இது தொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.