Nirmala Sitharaman AI Video | நிர்மலா சீதாராமன் பேசுவது போன்ற AI வீடியோ மூலம் ரூ.17 லட்சம் மோசடி
நிர்மலா சீதாராமன் ஏஐ வீடியோ மூலம் ரூ.17 லட்சம் மோசடி
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுவது போன்று போலி வீடியோ மூலம் 2 தொழில் அதிபர்களிடம் இருந்து 17 லட்ச ரூபாய் மோசடி செய்யப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோத்தகிரியை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவருக்கு, பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுவது போன்ற போலி வீடியோ இன்டாகிராமில் வந்துள்ளது. இதை நம்பிய அவரை 7 லட்ச ரூபாய் வரை முதலீடு செய்ய வைத்து, மோசடி கும்பல் ஏமாற்றி உள்ளது.
இதேபோன்று மற்றொரு தொழில் அதிபர், தனக்கு வந்த வீடியோவை நம்பி முதலீடு செய்து 10 லட்ச ரூபாயை இழந்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள நீலகிரி சைபர் கிரைம் போலீசார், சம்பவத்தில் தொடர்புடையவர்களின் வங்கி கணக்குகளை முடக்கி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.