Padma Shri | ``இளைஞர்களை மூளைச்சலவை செய்தால்..’’ - சூப்பர் ஐடியா சொல்லும் பத்மஸ்ரீ பெறும் தமிழர்

Update: 2026-01-27 05:08 GMT

நாட்டின் வளர்ச்சிக்கு கிராமங்களின் மறுமலர்ச்சி அவசியம் என வேளாண் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ராமசாமி கருத்து

ஏஐ மற்றும் ரோபாட்டிக் தொழில்நுட்பங்கள் விவசாயத்தில் வருவது வளர்ச்சி தான் என, பத்மஸ்ரீ விருது பெறும் வேளாண் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ராமசாமி தெரிவித்துள்ளார்.

பத்மஸ்ரீ விருதுகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், கோவையை சேர்ந்த வேளாண் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ராமசாமிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

வேளாண் உயிரி தொழில்நுட்பம், உர நீர்ப்பாசனம் மற்றும் உயிரி எரிவாயு மேம்பாட்டிற்கான தேசிய கொள்கை திட்டமிடலில் பங்களித்ததற்காக, இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படுகிறது. இதுகுறித்து தந்தி டிவிக்கு பேட்டியளித்த ராமசாமி, கிராம மறுமலர்ச்சிக்காக இளைஞர்கள் செயலாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்