Nilgiris | Crime | பீப் பிரியாணி கொடுத்ததால் ஆத்திரம் | கடையில் அரிவாளுடன் மிரட்டிய நபர்
பீப் பிரியாணி கொடுத்ததால் ஆத்திரம்... அரிவாளுடன் மிரட்டியவர் கைது
நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள ஹோட்டலில், சிக்கன் பிரியாணிக்கு பதிலாக பீப் பிரியாணி கொடுத்த ஆத்திரத்தில், பெரிய அரிவாளுடன் கடைக்குள் வந்து ஒருவர் மிரட்டிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
கூடலூர் பகுதியில் பஞ்சர் கடை நடத்தி வரும் சுந்தரமூர்த்தி என்பவர், ஹோட்டலில் சிக்கன் பிரியாணி பார்சல் கேட்டுள்ளார். அப்போது, பீப் பிரியாணியை ஹோட்டல் ஊழியர்கள் கட்டிக் கொடுத்ததால் ஆத்திரமடைந்த அவர்,
ஹோட்டலில் இருந்த கண்ணாடியை உடைத்ததுடன், பெரிய அரிவாளை எடுத்து ஊழியர்கள் மற்றும் ஹோட்டல் உரிமையாளரை மிரட்டியுள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் சுந்தரமூர்த்தியை போலீசார் கைது செய்தனர்.