Nilgiri Elephant | JackFruit | காட்டிலிருந்து பலாபழத்தை தேடி வீடுகளுக்கு வந்த யானை கூட்டம்
Nilgiri Elephant | JackFruit | காட்டிலிருந்து பலாபழத்தை தேடி வீடுகளுக்கு வந்த யானை கூட்டம்
குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த 4 யானைகள் விரட்டியடிப்பு
கூடலூர் அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த 4 காட்டு யானைகளை வனத்துறையினர் விரைந்து செயல்பட்டு வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூரை சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது பலாப்பழ சீசன் தொடங்கி உள்ளதால் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. அந்த வகையில், முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து வந்த 4 யானைகள், கூடலூர் அருகே உள்ள குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தன. தகவலறிந்து வந்த வனத்துறையினர் காட்டுயானைகளை விரட்டிய நிலையில், பெங்களூர் செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலையை கடந்து மாக்குமூலா பகுதிக்குள் ஒன்றன்பின் ஒன்றாக யானைகள் சென்றன.