Neyveli | சிகரெட் பிடித்த கல்லூரி மாணவர்களிடம் லஞ்சம் வாங்கிய காவலர் சஸ்பெண்ட்!
கடலூர் மாவட்டம் நெய்வேலியில், சிகரெட் பிடித்த கல்லூரி மாணவர்களிடம் லஞ்சம் வாங்கிய காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலைய முதுநிலை காவலரான பூவராகவன், கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியில், சிகரெட் பிடித்த இரண்டு மாணவர்களை பிடித்து கஞ்சா வழக்கு போடுவேன் என்று மிரட்டி ஒரு லட்சத்து 30 ஆயிரம் லஞ்சமாக பெற்றுள்ளார். அத்துடன் லண்டன் சென்ற அந்த மாணவர்களிடம் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.