படம் பார்க்க சென்ற புது மாப்பிள்ளை மனைவி கண்முன்னே தியேட்டரிலே மரணம்

Update: 2025-07-15 06:13 GMT

சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் மால் ஒன்றில் உள்ள தியேட்டரில் படம் பார்த்து கொண்டிருந்த புதுமாப்பிள்ளை, மனைவி கண் முன்னே மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எழும்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த மெல்வின் என்பவருக்கு கடந்த 1 மாதத்திற்கு முன்பு காயத்ரி என்பவருடன் திருமணமானது. இந்நிலையில் அவர் தனது மனைவியுடன் தியேட்டரில் படம் பார்க்க சென்ற நிலையில், திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவரை மருத்துவர்கள் பரிசோதித்து ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். அவர் மாரடைப்பால் இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என கேளம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்