NewMarket issue | "அடிப்படை வசதி இல்லாத புதிய தினசரி மார்க்கெட்?" | வியாபாரிகள் எடுத்த திடீர் முடிவு
"அடிப்படை வசதி இல்லாத புதிய தினசரி மார்க்கெட்?"
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில், தற்காலிக மார்க்கெட் அமைந்துள்ள பகுதியை காலி செய்ய கால அவகாசம் கேட்டு வியாபாரிகள் மனு அளித்துள்ளனர். கோபிசெட்டிபாளையம் நகராட்சி சார்பில், வியாபாரிகளுக்காக கட்டப்பட்ட புதிய தினசரி மார்க்கெட் வளாகத்தில், அனைத்து கடைகளுக்கும் இடம் ஒதுக்க முடியாத நிலை உள்ளது. இதுவரை 74 கடைகளுக்கு மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், வியாபாரிகள் தற்காலிக மார்க்கெட் இடத்தை காலி செய்ய வேண்டும் என வருவாய்த்துறை அறிவிப்பு வெளியிட்டது. இந்த நிலையில், சுமார் 200க்கும் மேற்பட்ட வியாபாரிகள் ஊர்வலமாக சென்று வருவாய் கோட்டாட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளனர். புதிய தினசரி மார்கெட்டில் போதுமான வசதிகளை ஏற்படுத்திய பின் கடைகளை காலி செய்து கொள்வதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.