தொடர்ந்து பெய்யும் கனமழை ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்த மணிமுத்தாறு அணை

Update: 2025-03-02 13:51 GMT

நெல்லை மாவட்டம் அம்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 தினங்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து உள்ளிட்ட பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக ஆண்டு முழுவதும் தண்ணீர் ஆர்பரித்து கொட்டும் மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்து கடும் வெள்ளப்பெருக்கு நிலவி வருகிறது. இதன் காரணமாக அடிவாரத்திலுள்ள மணிமுத்தாறு அணைக்கான நீர்வரத்தானது அதிகரித்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்