"என் மேல பாஞ்சிருச்சு.." | மகனுக்காக உயிரை பணயம் வைத்து ரத்தம் வடிய சிறுத்தையை விரட்டிய நெல்லை பெண்

Update: 2025-11-15 02:42 GMT

சிறுத்தையை கூடையால் அடித்து விரட்டிய வீரப்பெண்

நெல்லை பாபநாசம் அருகே வீட்டில் நுழைந்த சிறுத்தையை பெண் ஒருவர் கூடையை கொண்டு அடித்து விரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரையார் அணையின் அடிவாரப்பகுதியில் வசித்து வருபவர் சுஜிதா. இவர் தனது 2 மகன்களுடன் வசித்து வரும் நிலையில், சம்பவத்தன்று இரவில் சிறுத்தை ஒன்று வீட்டிற்குள் புகுந்துள்ளது. அப்போது தனது மாற்றுத்திறனாளி மகனை காக்க, சிறுத்தையை, துணிக்கூடையை கொண்டு அடித்து விரட்டியுள்ளார். இதில் அவரின் முகம் உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்த நிலையில், சிறுத்தை அங்கிருந்து தப்பி ஓடியது. தாங்கள் பாதுகாப்பாக வாழ, சேதமடைந்த வீடுகளை சீரமைக்க வனத்துறை அனுமதி அளிக்க வேண்டும் என சுஜிதா கோரிக்கை வைத்துள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்