ஈவு இரக்கமின்றி மூதாட்டியை சரமாரியாக தாக்கிய பக்கத்து வீட்டு பெண்... கோவையில் அதிர்ச்சி
கோவை சரவணம்பட்டி அருகே தனியாக வீட்டில் இருந்த மூதாட்டியை தாக்கி எட்டரை பவுன் நகை பறிக்கப்பட்ட சம்பவத்தில், பக்கத்து வீட்டு பெண்ணை போலீசார் கைது செய்தனர். சிவானந்தாபுரத்தில் வெங்கடேஷ் என்பவரின் வீட்டில் அனைவரும் வேலைக்குச் சென்றிருந்த நேரத்தில், வீட்டில் இருந்த பாட்டியை தாக்கி அவர் அணிந்திருந்த வளையல், கம்மல் என எட்டரை பவுன் நகையை மர்ம நபர் பறித்துச் சென்றுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், பக்கத்து வீட்டில் வசிக்கும் தீபா என்பவர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து தீபாவை போலீஸார் கைது செய்தனர்.