தூத்துக்குடியில் தன் நம்பிக்கையுடன் 60 வயதில் சித்த மருத்துவர் ஒருவர் நீட் தேர்வு எழுத வந்தது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த சித்த மருத்துவர் பச்சைமால், தூத்துக்குடி புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்திற்கு தேர்வு எழுத வந்தார். அப்போது அவர் மாணவ மாணவிகள் நீட் தேர்வு தோல்வியால் மனம் உடைந்து விபரீத முடிவு எடுக்கக் கூடாது என்று அறிவுரை வழங்கினார். மேலும், மத்திய அரசு நீட் தேர்வு எழுத வயது வரைமுறை கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.