காலேஜ் பெண்ணுக்கு Love Torcher செய்த டிரைவர்.. பெண் எடுத்த அதிரடி முடிவு
சென்னை கோயம்பேடு அருகே கல்லூரி மாணவிக்கு காதல் தொந்தரவு செய்த நபரை போலீசார் கைது செய்தனர். மாணவியின் பக்கத்து வீட்டில் வசித்த கார் ஓட்டுநரான ராஜா, கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக மாணவிக்கு காதல் தொல்லை அளித்துள்ளார். இதனால் மாணவி வேறு இடத்திற்கு வீடு மாறி சென்று விட்ட நிலையில், ராஜா அங்கு சென்றும் மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும், மாணவியிடம் தம்மை திருமணம் செய்து கொள்ளுமாறும் அவர் வற்புறுத்தியுள்ளார். மாணவி அளித்த புகாரின் பேரில் போலீசார் ராஜாவை கைது செய்து மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.