திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் விவசாய நிலத்தில் நடவு செய்யப்பட்ட பயிரை டிராக்டர் கொன்டும் அழித்தும், தட்டி கேட்ட நபர்களையும் அரசு பேருந்து ஓட்டுநர் தாக்கி அட்டூழியத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பூர்வீக சொத்து தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் விவசாயம் செய்ய பாதுகாப்பு கேட்டு ஒரு தரப்பினர் திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர். இதனால் இருதரப்பில் இருந்தும் இருவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.