காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் நரசிம்மர் ஜெயந்தி உற்சவம் விமர்சையாக நடைபெற்றது. இதையொட்டி உற்சவர் நரசிம்ம பெருமாளுக்கு மஞ்சள், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு வெண்பட்டு உடுத்தி, மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நரசிம்ம பெருமாளை வழிபட்டனர். .