Namakkal | Tragedy | சாலையில் விழுந்த மரத்தால் இளம்பெண் உயிரிழந்த சோகம்
நாமக்கல் மாவட்டம் குமாரப்பாளையம் அருகே சாலையின் நடுவே விழுந்த மரத்தில் மோதி தூக்கி வீசப்பட்டு இளம்பெண் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குமாரப்பாளையத்தில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் பனைமரம் ஒன்று சாலையில் விழுந்துள்ளது. இதனை பார்க்காமல் வேகமாக வாகனத்தில் வந்த காயத்ரி என்ற இளம்பெண் மரத்தில் மோதி தூக்கி வீசப்பட்டுள்ளார். இந்த விபத்தில் காயத்ரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.