Namakkal | "யூனிபார்மில் பெல்ட் அணியாததால் சிறுமியை அடித்த பள்ளி தாளாளர்" - உறவினர்கள் சாலை மறியல்

Update: 2025-09-09 16:14 GMT

பள்ளிபாளையம் பகுதியில தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமி இடுப்பு பெல்ட் அணியலனு, பள்ளியின் தாளாளர் அடித்ததா சொல்லி குழந்தையின் பெற்றோர் சாலை மறியலில் ஈடுபட்டிருக்காங்க...

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்துல இருக்க தனியார் பள்ளியில, ஆவரங்காடு பகுதிய சேர்ந்த 7 வயது சிறுமி மூன்றாம் வகுப்பு படிக்குறாங்க. யூனிபார்ம்ல பெல்ட் போடலங்கறதுக்காக அந்த சிறுமிய பள்ளியின் தாளாளர் கோமளா பலமா தாக்கிய கூறப்படுது. இந்நிலையில், பள்ளிக்கு வந்த சிறுமியோட பெற்றோர் ஆசிரியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவங்க சாலை மறியல்ல ஈடுபட்டதால பரபரப்பு ஏற்பட்டுச்சு... இதனைடுத்து அங்க வந்த போலீசார் பெற்றோரையும், பள்ளி ஆசிரியர்களையும் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டாங்க...

Tags:    

மேலும் செய்திகள்