Namakkal | `அரவிந்த்' பெயரை பயன்படுத்தி ஆதாயம் - நாமக்கல்லில் திடுக்கிடும் புகார்
சமூக சேவகர் பெயரில் மோசடி - நடவடிக்கை எடுக்குமாறு போலீஸில் புகார்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்த அரவிந்த் என்ற சமூக சேவகர், தனது பெயரை பயன்படுத்தி மர்ம நபர்கள் சிலர் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக போலீஸில் புகார் அளித்துள்ளார். தேசிய மகளிர் தொழில் முனைவோர் அமைப்பின் தலைவராக உள்ள இவரின் பெயரை பயன்படுத்தி சிலர், சென்னையில் நடைபெறும் தனியார் நிகழ்ச்சிக்கு நன்கொடையாக, சுமார் 16 லட்ச ரூபாயை பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இதை தடுத்து நிறுத்துமாறு சமூக சேவகர் போலீஸில் புகாரளித்துள்ளார்.