மகன் ரிலீஸ் செய்த வீடியோ.. வீடு தேடி வந்த பிரளயம்.. திமுக புள்ளிக்கு நேர்ந்த பயங்கரம்..

Update: 2025-02-21 05:50 GMT

மகன் ரிலீஸ் செய்த வீடியோ.. வீடு தேடி வந்த பிரளயம்.. திமுக புள்ளிக்கு நேர்ந்த பயங்கரம்.."அய்யோ... அய்யோ.." - தெருவே அலறல்.. பரபரப்பு காட்சிகள்

திமுக கவுன்சிலரின் வீட்டிற்கு முன்பு 10 க்கும் மேற்ப்பட்டோர், ஆபாச வார்த்தைகளால் அடாவடி செய்ததோடு அவரது மகனை கண்னத்தில் அரைந்த காட்சிகள் தான் இவை...இரு தரப்பும் ஆவேசமாக மோதிக்கொள்ள, போலீஸார் சாமாதானம் செய்து சண்டையை தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள்.அடுத்த சில மணி நேரத்தில் இரு தரப்பை சேர்ந்தவர்களும் மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்ந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணையை தொடங்கி இருக்கிறார்கள்.தாக்குதலுக்கு உள்ளானவர் திமுக கவுன்சிலர் கலைமணி.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள, கோனேரிப்பட்டியை சேர்ந்தவர்.சம்பவத்தன்று இவரது வீட்டிற்கு 10 க்கும் மேற்பட்டவர்கள் வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள், காரணம்... வந்தவர்கள் அனைவரும் , ராசிபுரம் பகுதியில் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்தவர்கள் என்று சொல்லப்படுகிறது.சில நாட்களுக்கு முன் இவர்கள் பிளாக்கில் சரக்கு விற்றதாகவும், கவுன்சிலரின் மகன் அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதால், ஆத்திரமடைந்து வீடு தேடி வந்திருக்கிறார்கள். இதனால் இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறி இருக்கிறது.

கள்ளச்சந்தையில் மதுவிற்றதை தட்டிக்கேட்டாதால் தான் தாக்குதல் நடத்தப்பட்டதாக, கவுன்சிலர் தரப்பு போலீஸில் புகார் கொடுக்க, எதிர் தரப்பினரோ, மாமூல் கேட்டு தொல்லை செய்ததால் தான் இந்த சம்பவமே நடந்தது என வாக்குமூலம் அளித்திருக்கிறார்கள்.கலைமணியின் மகன் லோகு சரவணனும் நகர திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்து வந்திருக்கிறார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னாதாக அவரை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கியிருக்கிறார்கள்.இதனால் விரக்தியில் இருந்த லோகு சரவணன்.

கள்ளச்சந்தையில் மதுவிற்ற நபர்களிடம் மாமுல் கேட்டதாகவும், அப்போது அவர்கள் பணம் தராததால், அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இதானல் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாகவே அந்த கும்பல் லோகு சரவணனை தேடி வந்திருக்கிறார்கள்.

ஆனால் அவர் வீட்டில் இல்லாத நிலையில், அவரது தந்தையும் கவுன்சிலருமான கலைமணியிடம் வாக்குவாதம் செய்திருக்கிறார்கள். அதன் தொடர்ச்சியாகவே இந்த மோதல் உருவாகி இருக்கிறது.

இருதரப்பு புகாரையும் பெற்றுக் கொண்ட போலீஸார், வழக்குபதிவு செய்து விசாரித்து வருக்கிறார்கள். தீவிர விசாரணைக்கு பிறகே யார் சொல்வது உண்மை யார் சொல்வது பொய் என தெரியவரும்.

Tags:    

மேலும் செய்திகள்