Nagai | Running | நாகையை சுற்றி ஓடிய 5,000 பேர்.. அப்படி என்ன நடந்தது?

Update: 2025-03-10 02:51 GMT

நாகையில் பிளாஸ்டிக் இல்லா கடற்கரை மண்டலத்தை உருவாக்க வலியுறுத்தி பிரமாண்ட மாரத்தான் போட்டி நடைபெற்றது. மாசி மகத்தை முன்னிட்டு அக்கரைப்பேட்டை கிராமம் சார்பில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். 7 கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற போட்டியில் சளைக்காமல் நீண்ட தூரம் போட்டியாளர்கள் உற்சாகத்துடன் ஓடினர். மாரத்தான் போட்டியில் முதல் 11 இடங்களை பிடித்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை அக்கரைப்பேட்டை கிராமத்தினர் வழங்கி பாராட்டினர்‌.

Tags:    

மேலும் செய்திகள்