தந்தையாக நின்று திருமணத்தை நடத்தி வைத்த ராதாகிருஷ்ணன்.. | Nagapattinam | Radhakrishnan IAS

Update: 2025-02-02 17:42 GMT

சுனாமி தாக்கியபோது, நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் மீட்கப்பட்ட குழந்தைக்கு தந்தையாக இருந்து வளர்த்து வந்த உணவுத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன்-கிருத்திகா தம்பதியினர், திருமணம் செய்து வைத்துள்ளனர். வேளாங்கண்ணியில் மீட்கப்பட்ட சௌமியா, மீனா ஆகிய இரு குழந்தைகள் உள்பட 150 குழந்தைகளை, அப்போது ஆட்சியராக இருந்த ராதாகிருஷ்ணன், காப்பகத்தில் தங்க வைத்திருந்தார். அவர்களில் சௌமியாவுக்கு திருமணம் முடிந்த நிலையில், மீனாவின் திருமணம், நாகை நெல்லுக்கடையில் நடைபெற்றது. இதில், ராதாகிருஷ்ணன், தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு தங்கள் மகளுக்கு நடக்கும் திருமணமாக கருதி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்