ஜங்ஷனில் இருந்து முருகன் கோயிலுக்கு இலவச பேருந்து சேவை
- திருத்தணியில் முருகன் கோயிலுக்கு இலவச பேருந்து சேவையை, அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர்பாபு, நாசர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
- திருத்தணி முருகன் கோயில் மலை மீது, மொட்டை அடிக்கும் நிலையத்திலிருந்து திருத்தணி நகராட்சி சித்தூர் சாலை, முருகூர் என்ற பகுதியை இணைக்கும் வகையில், இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்க திட்டமிட்டுள்ளது.
- இந்த பணிகளை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.
- இதன் பின்னர், திருத்தணி ரயில் நிலையத்திலிருந்து மலை கோவிலுக்கு இலவச பேருந்து சேவையை அவர்கள் தொடங்கி வைத்தனர்.