ஒரே பகுதியில் ஏகப்பட்ட பெண்களுக்கு நேர்ந்த விபரீதம் - வயிற்றிலே கருவை அழிக்கிறதா செல்போன் டவர்? மகப்பேறு டாக்டர் விளக்கம்
சேலம் அருகே அமைக்கப்பட்ட செல்போன் டவர் காரணமாக, ஒரே கிராமத்தை சேர்ந்த பெண்களுக்கு அடுத்தடுத்து கருச்சிதைவு நடைபெறுவதாக அதிர்ச்சி தரும் புகார் வெளியாகியுள்ளது. மின்னாம்பள்ளி ரயில்வே கேட் பகுதியில், தனியார் நிறுவனங்கள் இரண்டு செல்போன் டவர்களை அமைத்துள்ளன.இந்த நிலையில், அதன் சுற்றுவட்டார பகுதியில் அதிக அளவில் புற்றுநோய் ஏற்படுவதாகவும்,பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படுதாகவும் புகார் எழுந்துள்ளது. இது குறித்து பதில் அளித்த பேசிய மகப்பேறு மருத்துவர் உஷா ராஜேந்திரன், இந்த விவகாரத்தில் தொடர்ந்து ஆய்வுகள் நடந்து வருவதாகவும், டவர் கதீர் வீச்சு பாதிப்புகள் இதுவரை நிரூபிக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.