புதுச்சேரி பெண் எம்.எல்.ஏ சந்திரபிரியங்காவின் முன்னாள் கணவருக்கு கொலை மிரட்டல் விடுத்த என்.ஆர். காங்கிரஸ் நிர்வாகி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
புதுச்சேரி முன்னாள் பெண் அமைச்சரும் தற்போதைய நெடுங்காடு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சந்திரபிரியங்காவின் முன்னாள் கணவர் சண்முகம். இவருக்கு போன் மூலம் கொலை மிரட்டல் விடுப்பதாக அளித்த புகாரின் பேரில் என்.ஆர் காங்கிரஸ் நிர்வாகியும் சந்திரபிரியங்காவின் உறவினருமான ஈஸ்வர்ராஜ் மீது லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். முன்னதாக இரண்டு அமைச்சர்கள் தன்னை டார்ச்சர் செய்வதாக சந்திரபிரியங்கா வீடியோ வெளியிட்டிருந்தது குறிப்பிடதக்கது.