செங்கடல் பகுதியில் ஏவுகணை தாக்குதல் - 26 மணி நேரம் கடலில் உயிருக்கு போராடிய Ex. CISF வீரர்
செங்கடல் பகுதியில் ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளான கப்பலில் இருந்து உயிர் பிழைக்க கடலில் குதித்து முன்னாள் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் அகஸ்டின் சொந்த ஊர் திரும்பியுள்ளார். கொல்லங்கோடு பகுதியை சேர்ந்த அகஸ்டின், வெளிநாட்டு கப்பலில் பாதுகாப்பு பணியில் இருந்த போது ஏவுகணை தாக்குதலுக்கு ஆளானர். இதையடுத்து, கடலில் குதித்த அவர் மாயமானதாக கூறப்பட்ட நிலையில், சுமார் 26 மணி நேரத்திற்கு பின் மீட்கப்பட்டார். இந்நிலையில் சொந்த ஊர் திரும்பிய அகஸ்டின் மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்து உள்ளார். இதனிடையே, அவரின் தாயார் உயிரிழந்த சம்பவம் அகஸ்டின் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரத்தில் அகஸ்டின் உடன் மாயமான கேரளாவை சேர்ந்த நபர் ஏமானில் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.