சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு புறப்பட்ட அரசுப் பேருந்தில் ஏறி பயணம் செய்தபடி, போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு மேற்கொண்டார்.
தனது வழக்கமான பணிகளை முடித்துக்கொண்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வந்த அவர், அங்கு திடீரென ஆய்வு மேற்கொண்டார். பின்னர், பயணிகளுடன் அரசுப் பேருந்தில் ஏறி பயணம் செய்த அவர், பேருந்துகளின் செயல்பாடு, ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் பயணிகளிடம் நடந்து கொள்ளும் விதம், மற்றும் பயணிகளின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.