Minister Muthusamy | அமைச்சர் அடித்த ஒரு போன் கால் - சில நிமிடங்களில் கலைந்த கூட்டம்

Update: 2025-09-16 09:37 GMT

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் நிபந்தனை பட்டாவை ரத்து செய்ய கோரி தர்ணாவில் ஈடுபட்ட பொதுமக்களிடம் அமைச்சர் முத்துசாமி தொலைபேசியில் பேசியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். அந்தியூர் தாலுகாவில் 1,600 ஏக்கர் விவசாய நில பட்டா நிபந்தனை பட்டாவாக இருப்பதாக கூறி வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் 10 மணிநேரத்துக்கும் மேலாக தர்ணாவில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் தங்களை சந்திக்காமல் போராட்டத்தைக் கைவிட மாட்டோம் என பொதுமக்கள் கூறியதால், அமைச்சர் முத்துசாமி தொலைபேசியில் தொடர்புகொண்டு சுமுக தீர்வு காண்பதாக உறுதியளித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்