"மாணவர்களை துன்புறுத்திய சத்துணவு சமையலர்"-பெற்றோர்கள் போராட்டம்

Update: 2025-07-01 15:07 GMT

தலைமை ஆசிரியருக்கும் சத்துணவு சமைக்கும் ஆயாவிற்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் மாணவ மாணவிகளை ஆயா துன்புறுத்தியதாகவும் சத்துணவில் விஷத்தை வைத்து உங்களை கொன்று விடுவதாகவும் மாணவ மாணவிகளை மிரட்டியதாக குற்றம் சாட்டி பெற்றோர்கள் பள்ளியில் முற்றுகை .மாநகராட்சி ஆணையர் மற்றும் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி இருவரையும் விசாரணைக்கு வர உத்தரவு.புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்பட்ட உசிலங்குளத்தில் பேரறிஞர் அண்ணா நினைவு மாநகராட்சி தொடக்கப்பள்ளி உள்ளது இங்கு 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர் இந்த நிலையில் பள்ளியில் பணியாற்றும் தலைமை ஆசிரியர் கோமதிக்கும் சமையல் நித்யாவிற்கும் இடையே நீண்ட காலமாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது

இன்று இருவருக்கும் இடையே தவறாக நடந்ததாகவும் கூறப்படுகிறது இதனால் கோபம் அடைந்த சமையலர் நித்தியா பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியரிடம் தவறாக பேசி துன்புறுத்தியதாக கூறப்படுகிறது

இதனைத் தொடர்ந்து மாணவ மாணவிகள் தங்களது பெற்றோரிடம் புகார் அளித்ததை தொடர்ந்து இன்று பெற்றோர்கள் பள்ளி தொடங்கியவுடன் மாணவ மாணவிகளுக்கு ஆயா விஷத்தை வைத்துக் கொன்று விடுவதாக மாணவ மாணவியரிடம் மிரட்டியதாக குற்றம் சாட்டி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனை தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் நாராயணன் மற்றும் காவல் துறையினர் விரைந்து வந்து இருவரிடமும் விசாரணை நடத்தி சுமுகமாக பள்ளி நடப்பதற்கு நடவடிக்கை எடுத்தனர் பெற்றோர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து பெற்றோர்கள் கலைந்து சென்றனர் பெற்றோர்களின் திடீர் போராட்டத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

இதனை தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் நாராயணன் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் சமையலர் இருவரையும் விசாரணைக்கு ஆஜராகுமாரு கூறிவிட்டு சென்றார்

Tags:    

மேலும் செய்திகள்