Theni | Mic Set Competition | ``மைக் செக் 1..2..3.. போட்றா பாட்ட.. வினோதமாக நடந்த மைக் செட் போட்டி
Theni | Mic Set Competition | ``மைக் செக் 1..2..3.. போட்றா பாட்ட.. வினோதமாக நடந்த மைக் செட் போட்டி
தேனி மாவட்டம் குச்சனூர் அருகே மைக் செட் உரிமையாளர்களுக்கான இசைப்போட்டி களைகட்டியது. கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு, திமுக மற்றும் ஒலிபெருக்கி சங்கத்தின் சார்பில் இந்த இசைப்போட்டி திருவிழா நடைபெற்றது. இதில் துல்லியமாகவும், தெளிவாகவும் அதிக சத்தத்துடனும் பாடல்களை படிக்கக் கூடிய சிறந்த ஒலி பெருக்கியின் உரிமையாளருக்கு ரொக்கத் தொகை பரிசாக வழங்கப்பட்டது.
இந்த போட்டியை சின்னமனூர், குச்சனூர் மற்றும் தேனி மாவட்டத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து வந்த இசை ரசிகர்கள் ஆர்வத்துடன் பாடல்களை கேட்டு ரசித்தனர். இதில் பங்கேற்ற ஒலிபெருக்கி உரிமையாளர்கள், திருவிழாக்களில் கூம்பு வடிவ ஒலிபெருக்கியை பயன்படுத்த அரசு அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.