மாத்திரை தராத ஆத்திரத்தில் மெடிக்கலை இருக்கும் இடம் இல்லாமல் சிதைத்த வெறியர்கள்
கேரளாவின் திருவனந்தபுரத்தில், போதை பொருளுக்கு இணையான மாத்திரை தராத காரணத்தால் மருந்தகத்தை இளைஞர்கள் அடித்து நொறுக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெய்யாற்றின்கரையில் உள்ள மருந்தகத்தில் இந்த சம்பவம் நடைபெற்ற நிலையில், சிசிடிவி காட்சி அடிப்படையில் தாக்குதல் நடத்திய இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர்.