மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு கல்வி சுற்றுலா தொடக்கம்
சென்னை மாநகராட்சியின் கீழ் உள்ள பள்ளிகளில் 4 மற்றும் 5ம் வகுப்பு பயிலும் மாணவர்களை ஒரு நாள் சுற்றுலா அழைத்துச் செல்லும் நிகழ்வினை ரிப்பன் வளாகத்தில் இருந்து மேயர் பிரியா தொடங்கி வைத்தார்.
130 நடுநிலைப் பள்ளிகளில் 4 மற்றும் 5 ஆம் வகுப்புகளில் பயின்று வரும் 5335 மாணவர்கள் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களுக்கு
கல்வி சுற்றுலா சென்று வர இருக்கின்றனர். மாநகரப் போக்குவரத்துக்கழகப் பேருந்துகள் மூலம் மாணவர்கள் அழைத்து செல்லப்பட்டனர். இந்த கல்வி சுற்றுலா மூலம் மாணவர்களுக்கு கல்வி மற்றும் பொது அறிவு சிந்தனை மற்றும் மகிழ்ச்சிகரமான எண்ணங்கள் உருவாகும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது...