மயோனைஸ் சாப்பிட்டால் உயிரே போயிடுமா?.. மருத்துவர் சொன்ன திகிலூட்டும் அதிர்ச்சி தகவல் - மக்களே உஷார்
பச்சை முட்டையில் தயாரிக்கப்படும் மயோனைசுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில், இதற்கு மருத்துவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். சமைக்காத பச்சை முட்டை மற்றும் எண்ணெய் மூலம் தயாரிக்கப்படும் மயோனைஸ், உடலில் பல்வேறு நோய்களுக்கு வழிவகுப்பதாக கூறும் மருத்துவர்கள், அதில் அதிகபடியான கொழுப்பும், கலோரியும் இருப்பதாக சுட்டிக்காட்டுகின்றனர். இதய நோய், உடல் பருமன் உள்ளிட்ட பாதிப்புகளையும் இந்த மயோனைஸ் ஏற்படுத்தக்கூடும் என, மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.