சென்னையில் பெண் கொடுப்பதாக ஆசைகாட்டி ரூ.17 லட்சம் மோசடி செய்தவர் கைது
சென்னையை சேர்ந்த இளைஞரிடம் மகளை திருமணம் செய்து வைப்பதாக ஆசை காட்டி லட்ச கணக்கில் மோசடி செய்த பெண்ணின் தந்தையை போலீஸார் கைது செய்துள்ளனர். வில்லிவாக்கம், நியூ ஆவடி சாலையில் வசித்து வரும் ஜெயபிரகாஷ் என்பவர், கடந்த 2021ம் ஆண்டு மேட்ரிமோனியல் மூலமாக பிரபு என்பவரின் மகளை பெண் கேட்டு சென்றிருக்கிறார். திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்த பிரபு ஜெயபிரகாஷிடமிருந்து சிறிது சிறிதாக 17 லட்சம் பணமும், மொத்த குடும்பத்திற்கு புதிய செல்ஃபோனும் வாங்கிக் கொண்டு, கடைசியில் பெண் கொடுக்க முடியாது என ஏமாற்றி இருக்கிறார். இது குறித்து ஜெயபிரகாஷ் அளித்த புகாரின் பேரில் பிரபுவை கைது செய்து செல்ஃபோனை பறிமுதல் செய்த போலீஸார் தலைமறைவாக இருக்கும் குடும்பத்தினரை தேடி வருகிறார்கள்.