மேட்ரிமோனியே ஆயுதம் | 3 நாள் திட்டத்தோடு களமிறங்கும் கொள்ளை ராணி | ஆண்களே உஷார்
மேட்ரிமோனி மூலம் பழகி நகை, பணம் கொள்ளை
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே பெண் ஒருவர் மேட்ரிமோனி மூலம் பழகி வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றதாக புகார் எழுந்துள்ளது. திருமணம் செய்து கொள்வதாக கூறி, மூன்று நாட்கள் வீட்டில் தங்கிய பெண், உணவில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து விட்டு 4 சவரன் நகைகள் மற்றும் மூன்றரை லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றதாக விஜயகுமார் என்பவர் தெரிவித்துள்ளார். இது குறித்து புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்காததால், பிரியங்கா என்ற அந்த பெண் மிரட்டல் விடுப்பதாக கூறி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.