பட்டப்பகலில் பெண்ணின் கன்னத்தை கிள்ளி காதல் சொன்ன நபர்.. கம்பத்தில் கட்டி தோலை உரித்த சென்னை மக்கள்
சென்னை நுங்கம்பாக்கத்தில், சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற நபரை, பொதுமக்கள் கம்பத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்தனர். தி நகரை சேர்ந்த பெண் ஒருவர், அபிபுல்லா சாலையில் நடந்து சென்றபோது, மதுபோதையில் வந்த நபர் கன்னத்தை கிள்ளி, ஐ லவ் யூ எனக்கூறி தவறாக நடந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் கூச்சலிட்டதும், அருகில் இருந்தவர்கள் அந்த இளைஞரை பிடித்து, கம்பத்தில் கட்டி வைத்து அடித்தனர்.
தகவலறிந்து சென்ற போலீசாரிடம், அந்த நபரை பொதுமக்கள் ஒப்படைத்தனர். அவரது பெயர் விக்னேஷ் என்பதும், எதற்காக அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.