கோயிலில் உண்டியலை பெயர்த்து தூக்கி சென்ற திருடன்.. வெளியான பகீர் வீடியோ.. புதுக்கோட்டையில் அதிர்ச்சி

Update: 2025-04-12 02:15 GMT

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கூத்தாடி வயல் அரியநாயகி அம்மன் கோயிலில் கையில் அரிவாளோடு வந்த மர்ம நபர் ஒருவர் கோயிலின் பூட்டை உடைத்து உண்டியலை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. நள்ளிரவில் இந்த திருட்டு சம்பவம் நடைபெற்ற நிலையில், காலையில் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்