பெட்ரோலுக்கு பணம் தராமல் பங்க் உரிமையாளரை சரமாரி வெட்டிய நபர்.. அதிர்ச்சி வீடியோ
பெட்ரோலுக்கு பணம் தராமல் பங்க் உரிமையாளர் மீது தாக்குதல்
சிவகங்கை மானாமதுரையில் பெட்ரோல் நிரப்பிய பின் பணம் செலுத்த மறுத்த வாடிக்கையாளர் பங்க் உரிமையாளரை தாக்கிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளன. இதையடுத்து, சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் மீது பெட்ரோல் பங்க் உரிமையாளர் சேட்டு புகார் அளித்ததால் ஆத்திரமடைந்த அந்த
வாடிக்கையாளர் மீண்டும் வந்து வாளால் அவரை வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
படுகாயம் அடைந்த பெட்ரோல் பங்க் உரிமையாளர் சேட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்