Magic Couple and Baby | தாய், தந்தை, குழந்தை மூவருமே ஒரே தேதியில்... விசித்திரம் புரிந்த பிரபஞ்சம்

Update: 2025-12-24 04:07 GMT

தந்தை - தாய் - குழந்தை - ஒரே தேதியில் பிறந்த அதிசயம்..

அனைவரையும் அதிசயிக்க வைக்கும் ஒரு அரிய நிகழ்வு கடலூர் மாவட்டத்தில் நடந்திருக்கிறது. கடலூர் துரைசாமி நகர் பகுதியை சேர்ந்த ஆகாஷ் - சுபஸ்ரீ தம்பதியர் இருவருமே டிசம்பர் 22ஆம் தேதி பிறந்தவர்கள் என்ற நிலையில், அவர்களின் குழந்தையும் அதே தேதியில் கடந்த ஆண்டு சுகப்பிரசவமாக பிறந்துள்ளது. அதுவும் தந்தை பிறந்த அதே கிழமை, ராசி மற்றும் ரத்த வகையில் அந்த குழந்தை பிறந்திருப்பது அரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இதற்காக இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் அவர்கள் இடம் பிடித்துள்ளனர். கின்னஸ் சாதனைக்கு விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்