Maduravoyal | "எஸ்கேப் ஆனா விட்ருவோமா.." பணம் கேட்ட ஊழியர்.. கொந்தளித்த போதை ஆசாமிகள்
சென்னை மதுரவாயல் எம்எம்டிஏ காலனியை சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் ஹோட்டலுக்கு இரவு வந்த மூன்று பேர், போதையில் உணவு அருந்திவிட்டு பார்சல் வாங்கியுள்ளனர். அப்போது பணம் கொடுக்காமல் கிளம்ப முயன்றவர்களை, ஹோட்டல் ஊழியர் தடுத்து பணம் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்களில் ஒருவர், பொருட்களை கீழே தள்ளி ஊழியரை தாக்கியுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.