Maduranthakam Protest | திடீர் பரபரப்பு - ஆத்திரமடைந்து திரண்டு வந்த ஊர் மக்கள்.. திணறிய போலீஸ்

Update: 2025-08-06 07:45 GMT

Maduranthakam Protest | திடீர் பரபரப்பு - ஆத்திரமடைந்து திரண்டு வந்த ஊர் மக்கள்.. திணறிய போலீஸ்

டூவீலர் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் படுகாயம் - பொதுமக்கள் மறியல்

மதுராந்தகம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் 2 கல்லூரி மாணவர்கள் படுகாயமடைந்தாதால் 100க்கும் மேற்பட்ட லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம் பவுஞ்சூர் பகுதியைச் சேர்ந்த சஞ்சய், சதீஷ் இருவரும் கல்லூரி முடிந்து, இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொணடிருந்த போது, நெல்வாய் பாளையம் என்னும் இடத்தில் கனரக லாரி இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் கல்லூரி மாணவர்கள் இருவரும் படுகாயம் அடைந்தனர். தொடர்ந்து காயமடைந்த மாணவர்களை பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடனடியாக பொதுமக்கள் விபத்து ஏற்படுத்திய லாரியையும், அந்த வழியாகச் சென்ற 100க்கும் மேற்பட்ட லாரிகளையும் சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் கூறியதைத் தொடர்ந்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.  

Tags:    

மேலும் செய்திகள்