Madurai | தந்தையை கொன்று பணத்தை அள்ளி சென்ற வளர்ப்பு மகள்.. மதுரையை நடுங்க வைத்த சம்பவம்

Update: 2025-11-18 09:39 GMT

மதுரை அருகே வளர்ப்பு தந்தையுடன் ஏற்பட்ட வாக்குவாதம் கொலையில் முடிந்துள்ளது. மதுரை கணபதி நகரைச் சேர்ந்த பழனிச்சாமி, தனது இரண்டாவது மனைவியுடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று பழனிச்சாமி மட்டும் வீட்டில் தனியாக இருந்த நிலையில், வளர்ப்பு மகளான சித்ராதேவி, அவரது கணவர் சரத்குமார் மற்றும் நண்பர் விஜயகுமார் ஆகிய 3 பேரும் சென்றுள்ளனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் பழனிச்சாமியை கீழே தள்ளியதில் அவர் உயிரிழந்தார். இதையடுத்து வீட்டில் இருந்த பணம் மற்றும் செல்போனை எடுத்துவிட்டு மூவரும் தப்பியோடியதாக கூறப்படுகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மூவரையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்