Madurai Rajini Temple | ``35 வருட கனவு’’ மதுரையில் எழும்பியது ரஜினி கோயில்
35 வருட கனவு - ரஜினிக்கு கோவில் கட்டிய ரசிகர்
35 வருட வைராக்கிய கனவை நிஜமாக்கி, ரஜினிக்கு கோவில் கட்டிய ரசிகரின் செயல் அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர், அப்பகுதியின் ரஜினி மன்ற நகர செயலாளராக இருந்து வருகிறார். இந்த நிலையில் 35 வருடங்களுக்கு முன்பு அவர் வாடகை வீட்டில் குடியிருந்த போது, ரஜினி படத்தின் போஸ்டரை வீட்டு சுவற்றில் ஒட்டியபோது, அந்த வீட்டின் உரிமையாளர் போஸ்டரை கிழித்துள்ளார். சொந்த வீடு கட்டி அதில் போஸ்டர் ஒட்டிக்கொள் என வீட்டின் உரிமையாளர் கூறியுள்ளார். அந்த கனவு 35 வருடங்களுக்கு பிறகு தற்போது நிஜமாகி இருக்கிறது. புதிய வீடு கட்டிய சரவணன், அதற்கு ரஜினி பவனம் என பெயரிட்டுள்ளார். மேலும் வீட்டின் நுழைவு வாயிலில் ரஜினிக்கு கோவிலும் கட்டியுள்ளார்.