Madurai Incident | காந்தி சிலைக்கு காவி துண்டு அணிவித்த பாஜகவினர் | மதுரையில் பரபரப்பு
காந்தி சிலைக்கு காவி துண்டு அணிவித்த பாஜக-வினர் - மதுரையில் பரபரப்பு
மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் உள்ள காந்தி சிலைக்கு காவித்துண்டு அணிவித்த பாஜகவினரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியது. மகாத்மா காந்தி பிறந்த நாளை ஒட்டி மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் உள்ள காந்தி சிலைக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிலையில் பாஜக சார்பில் காந்தி சிலைக்கு மாலை மற்றும் காவி துண்டு அணிவிக்கப்பட்டது. காவி துண்டு அணிவிக்கப்பட்ட சம்பவம் சமூக வலைதள பக்கத்தில் கடும் கண்டனம் எழுந்த நிலையில் காந்தி சிலைக்கு அணிவிக்கப்பட்ட காவி துண்டு அகற்றப்பட்டது.