மாடு மறிக்கும் திருவிழாவில் கிராம. மக்களிடையே பிரச்சினை ஏற்பட்டால், அதை நிறுத்தி வைக்கும்படி உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தெரிவித்துள்ளது.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கல்லனை கிராமத்தில், மாடு மறிக்கும் திருவிழாவை அனைத்து தரப்பினரும் இணைந்து நடத்த உத்தரவிட கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மாடு மறிக்கும் திருவிழாவை நடத்துவதில் கிராம. மக்களிடையே, பிரச்சினை ஏற்பட்டால்,
அந்த பகுதியில் மாடு மறிக்கும் திருவிழாவை நிறுத்தி வையுங்கள் என தெரிவித்தனர்.
கிராம மக்கள் ஒற்றுமையாக இருந்து மாடு மறிக்கும் நிகழ்வை நடத்த தயாராக இருந்தால் அனுமதி வழங்குங்கள் எனக் கூறினர்.
மேலும், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு தெரிவித்தனர்.