மதுரை எய்ம்ஸ் குறித்து மத்திய அரசு சொன்ன தகவல்
மதுரை தோப்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் முதல் கட்ட கட்டுமான பணிகள், வரும் ஜனவரியில் முடிவடையும் என மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மத்திய அரசு தகவல் அளித்துள்ளது.
இது குறித்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனை பணி பல கட்டங்களாக நடைபெற்று வருவதாகவும்,
முதல் கட்ட மற்றும் இரண்டாம் கட்ட பணி ஜனவரி மாதம் முடிவடைந்து, அந்த மாதம் 26ம் தேதி மருத்துவமனை நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும் என மத்திய அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டள்ளது.
இது குறித்து, மனு தாரருக்கு பதில் அளித்த நீதிபதி, ஒரு மருத்துவமனையை குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டி முடிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட இயலாது என குறிப்பிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.